‘கடைசியில தோனிக்கே இப்டி நடந்திருச்சே’.. என்ன ‘தல’ இப்டி பண்ணிட்ட.. கடுப்பான ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 22, 2019 08:24 PM

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனி ஸ்டம்பிங் மூலம் அவுட்டான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: MS Dhoni being stumped against Afghanistan

இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் இடையேயான உலகக்கோப்பை போட்டி இன்று(22.06.2019) சவுதாம்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்களை எடுத்தது.

இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஆஃப்கானிஸ்தான் பௌலர்கள், இந்திய அணியை ஆரம்பத்தில் இருந்தே திணறடித்தனர். கடந்த முறை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா இப்போட்டியில் 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

இதனை அடுத்து விளையாடிய விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் கூட்டணி நிதானமாக விளையாடி ரன் ரேட்டை சீராக உயர்த்த ஆரம்பித்தது. இதில் கே.எல்.ராகுல் 30 ரன்கள் எடுத்து அவுட்டாக, அடுத்து களமிறங்கிய விஜய் சங்கரும் 29 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தோனி ஆஃப்கானிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்தில் இருந்தே தடுமாறினார். மறுமுனை அதிரயாக விளையாடிய விராட் கோலி 67 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துகொண்டிருந்த நிலையில், அதிரடியாக விளையாடிவார் என எதிர்பார்க்கப்பட்ட தோனியும் 28 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த கேதர் ஜாதவ் 52 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார்.

Tags : #ICCWORLDCUP2019 #MSDHONI #INDVAFG #TEAMINDIA