‘மோசமான சாதனையைப் பதிவு செய்த இந்திய அணி..’ ஆப்கன் பந்துவீச்சால் முடக்கம்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Jun 22, 2019 10:29 PM
சவுத்தாம்டனில் நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 224 ரன்கள் எடுத்துள்ளது.

உலகக் கோப்பையில் இதுவரை இந்திய அணி 4 போட்டிகளில் 3 வெற்றிகள் பெற்று 7 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் விராட் கோலி 67, கேதார் ஜாதவ் 52, விஜய் சங்கர் 29 ரன்களில் ஆட்டமிழந்தனர். தோனி 52 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். தன்னுடைய ஒருநாள் கிரிக்கெட் வாழ்நாளில் 2வது முறையாக இந்த ஆட்டத்தில் தோனி ஸ்டம்ப்டு ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மான், ரஹ்மத் ஷா, ரஷீத் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும், நயீப் மற்றும் மொகமது நபி தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்களை எடுத்துள்ளது. 2010க்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் இந்திய அணி எடுத்த குறைவான ரன்கள் இதுவே. உலகக் கோப்பை போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்த மோசமான சாதனையைப் பதிவு செய்துள்ளது.
