'அவர் தான் சொல்லனும்'... தோனி குறித்து முன்னாள் தேர்வுக் குழு தலைவர் அதிரடி கருத்து!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதான் ஒரு மிகப்பெரிய தோனி ரசிகர் என்று இந்திய அணியின் முன்னாள் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் சமீபத்தில் அளித்த போட்டியில் தோனியைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில், "ஓய்வோ தொடர்ந்து விளையாடுவதோ அந்த முடிவை தோனிதான் எடுக்க வேண்டும். தேர்வுக்குழு உறுப்பினர் என்ற வேலைக்கு அப்பாற்பட்டு சொல்ல வேண்டும் என்றால் எல்லோரையும்விட நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன்.
அவர் ஒரு கேப்டனாக அனைத்து சாதனைகளையும் செய்துவிட்டார். இரண்டு உலகக் கோப்பைகள், சாம்பியன்ஸ் கோப்பை, இந்தியாவை டெஸ்ட் ரேங்கில் முதலிடத்திற்கு கொண்டு வந்தது, இதையெல்லாம் யாரும் கேள்வி கேட்க முடியாது" என்றார்.
மேலும், "அவருடைய முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். தேர்வுக் குழுவினராக நாங்கள் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கி அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும். அதைத்தான் நாங்கள் இப்போது செய்துகொண்டு இருக்கிறோம்", என்றும் தெரிவித்துள்ளார்.
