"வி மிஸ் யூ" தோனி.. : 'அவங்க' 2 பெரும் கொஞ்சம் ரன்லயே விக்கெட் ஆயிட்டாங்க...'தோனி இல்லாத மேட்ச் பார்க்க..'. இந்திய ரசிகர்கள் ஆதங்கம்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | Jan 31, 2020 02:56 PM

"வி மிஸ் யூ" தோனி என்ற வாசகம் கொண்ட பதாகையை வைத்து இந்திய ரசிகர்கள் சிலர் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

\"Miss You Dhoni\" - Fans banner against New Zealand!

இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரில் 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. முதல் மூன்று டி20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில், 4வது போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

4ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் காயம் காரணமாக விளையாடவில்லை. இந்நிலையில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள டிம் சவுத்தி டாஸ் வென்று பவுலிங் செய்ய முடிவெடுத்தார். இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷமி, ஜடேஜாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. இன்றையப் போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோர் கொஞ்சம் ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தனர். இந்நிலையில் மைதானத்தில் சில ரசிகர்கள் "வி மிஸ் யூ தோனி" என்ற பதாகையை வைத்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

Tags : #MSDHONI #CRICKET #INDVSNZ