'கோலி' செஞ்சது ரொம்பவே தப்பு... ஒருவேளை 'அவர்' இருந்துருந்தா... இவருக்கு தான் 'வாய்ப்பு' கெடைச்சு இருக்கும்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று முன்தினம் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றி இருக்கிறது. மிகவும் விறுவிறுப்பாக சென்ற போட்டியில் வெற்றி யார் பக்கம் என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

ஆனால் முஹம்மது ஷமியின் 2 சூப்பர் விக்கெட்டுகள், ரோஹித் சர்மாவின் அதிரடி சிக்சர்கள் ஆகியவற்றால் இந்திய அணி சூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இதனையடுத்து இந்திய வீரர்களை பல்வேறு தரப்பினரும் போட்டிபோட்டு புகழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் விராட் கோலி, பும்ராவிற்கு சூப்பர் ஓவரை கொடுத்தது குறித்து முன்னாள் வீரர் சேவாக் கருத்து தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர்,'' ஒருவேளை தோனி கேப்டனாக இருந்திருந்தால் சாஹல், ஜடேஜா இருவரில் ஒருவருக்கு தான் சூப்பர் ஓவரை கொடுத்திருப்பார். ஏனென்றால் அந்த நாள் சிறப்பான நாளாக பும்ராவிற்கு அமையவில்லை. பும்ரா பவுலர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் அன்றைய தினம் அவருக்கு நல்ல நாளாக இல்லை,'' என்றார்.
