'தோனியை' விரட்டி விரட்டி கொஞ்சிய 'சாக்ஷி'... 'வெட்கப்பட்டு' ஓடி ஒளியும் தோனி... 'வைரல் வீடியோ'...
முகப்பு > செய்திகள் > இந்தியாதோனியின் மனைவி சாக்ஷி தனது கணவரை நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் கொஞ்சி விளையாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தனது தோழிகளுடன் நிற்கும் சாக்ஷி, தனது கணவர் தோனி மாடியிலிருந்து இறங்கி வருவதை வீடியோ எடுக்கிறார். அவரை ‘ஸ்வீட்டி, க்யூட்டி...’ என கொஞ்சி அழைப்பதைக் கண்டுகொள்ளாமல் செல்கிறார் தோனி. அவரைப் பின் தொடர்ந்து செல்லும் சாக்ஷி தன்னைச் சுற்றியிருக்கும் அத்தனைப் பேரிடமும் தோனியை ‘ஸ்வீட்டி ஆஃப் தி டே’ எனக் கூறுகிறார்.
வெட்கப்பட்டுக் கொண்டே வீடியோவில் சிக்காமலும், கண்டுகொள்ளாமலும் இருக்கும் தோனியின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Tags : #MSDHONI #DHONI #SAKSHI DHONI
