'காதல் தோல்வியால் விபரீத முடிவு'... பதறவைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Jun 14, 2019 06:04 PM

காதல் தோல்வியால், இளம் ஜோடிகள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Couple drinks, clicks photos before shooting themselves dead

ராஜஸ்தான் மாநிலம் பர்மர் நகரைச் சேர்ந்தவர்கள் 21 வயதான அஞ்சு சுதார் மற்றும் சங்கர் சௌத்ரி. இவர்களில் அஞ்சு சுதார் என்றப் பெண்ணுக்கு, ஒரு மாதத்துக்கு முன்தான் வேறு ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் இந்த இருவரும், அதேப் பகுதியில் உள்ள ஒரு மயானத்துக்குச் சென்று, நாட்டுத் துப்பாக்கியால் ஒருவருக்கு, ஒருவர் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இறந்தவர்கள் இருவரும் முன்னர் காதலர்களாக இருந்து, அது தோல்வியடைந்ததால் தற்போது தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். இருவரின் உடல்கள் கிடைத்த இடத்தில் மது பாட்டில்கள் கிடந்துள்ளன. அதனால் அவர்கள் குடிபோதையில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இறந்த ஜோடி தங்களின் உயிரை மாய்த்துக்கொள்வதற்கு பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி, எப்படி கிடைத்தது என்பது பற்றி இருவரின் உறவினர்கள், நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்துகொள்வதற்கு முன் இந்த இருவரும் துப்பாக்கியுடன் புகைப்படம் எடுத்து, அதை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அது தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #LOVERS #DEIED #SUICIDE