‘ஆமா... நா கருப்புதான்!’.. ‘ஆனா டீம்ல இருக்குறதுக்கு காரணம்..’ .. வீரரின் ‘தெறி’ பேச்சு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Feb 06, 2020 04:23 PM

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வென்றது. இப்போட்டியில் 98 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவியவர் பவுமா. பார்க்க குள்ளமாகவும் கருப்பாகவும் பவுமா இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான கமெண்டுகளைப் பற்றி அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

Yes, im black, but i love cricket thats why i play, Bavuma

அப்போது, ‘நான் கொஞ்சம் கருப்புதான். அது என் நிறம். ஆனால் நான் கிரிக்கெட்டை காதலித்து விளையாடுகிறேன். தென் ஆப்பிரிக்க அணியில் நான் இன்னும் நீடிப்பதற்குக் காரணம் எனது சிறப்பான ஆட்டம்தான் என நினைக்கிறேன். ஆனால் நான் அணியில் இல்லாத நேரம் என்னுடைய நிறத்தை காரணமாகக் காட்டி பலரும் பேசுவது சங்கடமாக உள்ளது’ என்று பேசியுள்ளார்.

மேலும் பேசியவர், ‘உலகெங்கும் இருக்கும் கிரிக்கெட் அணிகளில் வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்படுவதும், சேர்க்கப்படுவதும் நிகழும் நிலையில், வேறு யாருக்கும் நடக்காத ஒன்று எனக்கு மட்டுமே நடப்பது போல, நான் மட்டுமே அணியில் இருந்து நீக்கப்படுவது போல பேசப்படுவது வேதனை தருவதாக உள்ளது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்பட்ட பவுமா பின்னர் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags : #SA #BAVUMA