'நம்பர் 1' நபரை மிஸ் செய்கிறேன்.. கே.எல்.ராகுலுக்கு 'பதிலளித்த' தோழி..வைரல் போஸ்ட்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Sep 20, 2019 11:40 AM
இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன்களில் ஒருவரான கே.எல்.ராகுலின் ஆட்டம், சமீபகாலமாக கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.தனது ஆட்டத்தில் அவர் தொடர்ந்து தடுமாறி வருவதாக நெட்டிசன்களும் சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தநிலையில் கே.எல்.ராகுலின் இன்ஸ்டா போஸ்ட் ஒன்று அனைவரது கவனத்தையும் கவர்ந்து தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.மாடலும், நடிகை அலியா பட்டின் தோழியுமான அகன்ஷா ரஞ்சன் கபூர் சமீபத்தில்(Sep17)தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
அவரது பிறந்தநாள் கொண்ண்டாட்டத்தில் ராகுல் கலந்து கொள்ளவில்லை எனினும், தனது இன்ஸ்டாவில் அவர்,''சிறந்த தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்,''என தெரிவித்து இருந்தார்.
பதிலுக்கு அகான்ஷா,''நம்பர் 1 நபரை மிஸ் செய்கிறேன்,''என அழுகை எமோஜி ஒன்றை பதிவிட்டு,ராகுலின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டுள்ளார்.இந்த இருவரின் பதிவும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பலரின் புருவங்களையும் வெகுவாக உயர வைத்துள்ளது.
