‘நீங்க பாக்கதான போறீங்க! கண்டிப்பா நாங்க சிறப்பா விளையாடுவோம்’!.. இந்திய அணி குறித்து பிரபல வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Arunachalam | May 26, 2019 09:33 PM

உலக கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்துள்ளது. இதுகுறித்து, இந்திய அணி வீரர் ஜடேஜா மனம் திறந்துள்ளார்.

jadeja shares his experience about indian team after loss against NZ

உலக கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், அந்த போட்டியில், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா மட்டுமே சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்தார். இதுகுறித்து, இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா கூறியதாவது, ‘ஒரு போட்டியில் பெற்ற தோல்வியை வைத்து, இந்திய வீரர்களின் திறமையை தவறாக எடைபோடவேண்டாம்.

மேலும், ஒரு போட்டியில் கிடைத்த மோசமான தோல்வியால், இந்திய அணியின் பேட்டிங்கை குறைத்து மதிப்பிடவேண்டாம் என்றார். இந்நிலையில்,  இந்திய அணியில் திறமைமிக்க பல வீரர்கள் உள்ளதாக கூறிய அவர், இந்திய அணியின் பேட்டிங் குறித்து கவலைகொள்ள தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.