‘பயிற்சியின் போது அடுத்தடுத்து காயமடைந்த 2 முக்கிய வீரர்கள்’.. அதிர்ச்சியில் இந்திய அணி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | May 24, 2019 11:41 PM
உலகக்கோப்பை தொடங்க சில நாட்களே உள்ள நிலையில் இரு இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்துள்ளனர்.

உலகக்கோப்பை தொடர் வரும் 30 -ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்று தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறது. இந்திய அணியின் முதல் போட்டி ஜூன் 5 -ம் தேதி தொடங்குகிறது. இதில் தென் ஆப்பிரிக்க அணியுடன் இந்தியா மோதுகிறது. இதற்கு முன்னதாக நியூஸிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது வலை பயிற்சியில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானின் ஹெல்மெட்டில் பந்து தாக்கியது. இதனால் உடனடியாக அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. இதனைத் தொடரந்து விஜய் சங்கர் பயிற்சியில் ஈடுபட்டபோது பந்து அவரில் கையில் பலமாக தாக்கியது. இதனால் அவரும் களத்தில் இருந்து வெளியேறினார். மேலும் அவர்களின் காயம் குறித்த கூடுதல் தகவல் இன்னும் வெளியாகவில்லை. உலகக்கோப்பை நடைபெற சில நாட்களே உள்ள நிலையில் இந்திய அணியின் இரு முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
