உலகக்கோப்பை ஆர்வத்தில் தண்ணீர் ஊற்றி அணைத்த கேப்டன்..? ஏமாற்றத்தில் ரசிகர்கள்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | May 23, 2019 08:47 AM

அயர்லாந்து மற்றும் மே.இ.தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் வென்றதை அடுத்து உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணியின் மீது அதன் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

skipper mashrafe mortaza believes bangladesh can reach the semi finals

வங்கதேச ரசிகர்கள் அந்நாட்டு அணியின் மீது அதிக பற்றுதலும் நம்பிக்கையும் கொண்டவர்கள். முத்தரப்பு தொடரை வென்ற நிலையில் அவர்களது எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது.  இந்நிலையில் கேப்டன் மஷ்ரபே மோர்டசா எதார்த்தமாகப் பேசி அவர்களது எதிர்பார்ப்பில் தண்ணீர் ஊற்றி அணைத்துள்ளார்.

மஷ்ரபே கூறுகையில், “தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து என முதல் 3 போட்டிகளே மிகவும் கடினமானவை. அவற்றில் வெற்றி பெறுவது அவ்வளவு சுலபமில்லை. கடந்த 5-7 ஆண்டுகளாக நாங்கள் வெற்றி பெற வேண்டுமென ரசிகர்கள் ஆர்வத்துடன் போட்டிகளைப் பார்க்க வருகின்றனர். ஆனால் நான் அவர்களுக்கு சொல்வதெல்லாம் ஒன்றுதான். உலகக் கோப்பை என்பது வேறு விதமான ஒரு ஆட்டத்தொடர். இதற்கு வேறு ஒரு அணுகுமுறை தேவை” எனக் கூறியுள்ளார்.