‘மிளிரும் கோப்பையுடன், 10 அணிகளின் கேப்டன்கள்’!வெல்லப்போவது யார்? வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Arunachalam | May 24, 2019 01:47 PM

இங்கிலாந்தில் வரும் 30 ஆம் தேதி தொடங்கவுள்ள உலக கோப்பை தொடரில் பங்கேற்க 10 அணிகளும் இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளனர்.

watch video of 10 team captain participated in the event

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற மே 30 ஆம் தேதி தொடங்கி ஜூலை வரை நடைபெறுகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் முகாமிட்டுள்ள 10 அணிகளின் கேப்டன்கள் மட்டும் பங்கேற்கும் விதமாக “ஓரு கோப்பை 10 அணிகள்” என்ற ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 10 அணிகளின் கேப்டன்களிடம் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவர்கள் கேள்விகளை கேட்டனர். அதில் அனைத்து கேப்டன்களிடமும் ‘மற்ற அணியில் இருந்து ஒரு வீரரை தேர்வு செய்யலாம் உங்கள் விருப்பம் யார்’? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

மேலும், அந்த சிறுவர்களின் சட்டையில் வீரர்கள் ஆட்டோகிராப் போட்டனர். இதனையடுத்து, அனைத்து கேப்டனுகளும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்து கொண்டனர். இந்நிலையில், தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

 

Tags : #ICCWORLDCUP2019 #WORLDCUPINENGLAND #INDIA #TEAM CAPTAINS