'வேர்ல்டு கப் மேட்சுக்கு டிக்கெட் கிடைக்கலையா?'... 'இன்னும் ஒரு சான்ஸ் இருக்கு'... விபரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | May 24, 2019 11:23 AM

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான, கடைசி டிக்கெட்கள் இன்று விற்பனை செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

A final 40,000 CWC 19 tickets will be released today

10 அணிகள் இடையிலான 12-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான ஆயத்தங்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, வங்கதேசம், இந்தியா ஆகிய அணிகள் இறங்கியுள்ளன.

இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளுக்கு தலா 2 பயிற்சி ஆட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பயிற்சி ஆட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இன்று பிரிஸ்டலில் நடைபெறும் ஒரு பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கார்டிப்பில் நடக்கும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் சந்திக்கின்றன.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை ஜூன் மாதம் 5-ம் தேதி எதிர்கொள்ள உள்ளது. இதற்கு முன்னர், நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி விளையாட உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட்கள் ஏற்கனவே விற்றுதீர்ந்துவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், கடைசியாக உள்ள 40,000 டிக்கெட்டுகள் இன்று விற்பனை செய்யப்பட உள்ளதாக ஐ.சி.சி. உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு விற்பனை தொடங்குகிறது.

Tags : #ICCWORLDCUP2019 #CWC19