'படிச்சவங்க, புத்தியுள்ளவங்க பேசுற பேச்சா இது?': முன்னாள் இந்திய வீரருடன் வார்த்தைப் போர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | May 26, 2019 11:11 AM
பாகிஸ்தானுடன் இந்திய அணி வீரர்கள் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்கிற கவுதம் கம்பீரின் கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டனான அஃப்ரிடி கடும் விமர்சன தொனியிலான தனது கண்டனத்தைத்ட் தெரிவித்து வருகிறார்.
542 தொகுதிகளில் நடந்து முடிந்த மக்களவைப் பொதுத் தேர்தலில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான கவுதம் கம்பீர் பாஜகவின் சார்பில் போட்டியிட்டு, அதில் வெற்றியும் கண்டுள்ளார்.அண்மையில் கவுதம் கம்பீர் அளித்த பேட்டி ஒன்றில் புல்வாமாவில் இந்திய துணை நிலை ராணுவ வீரர்கள் 44 பேர், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாகவும், அதனால் பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் விளையாடுவதை இந்திய அணி முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
மேலும், அது இறுதிப் போட்டியாக இருந்தாலும் சரி, பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என்கிற முடிவில் திட்டவட்டமாக இருக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இருவருக்கும் முன்னதாகவே வாய்க்கால் தகராறு என்று வாய்வழியாக சொல்லுவார்கள். இந்நிலையில் அந்த வாய்க்கால் தகராறு தற்போது வாய்த்தகராறாகி வார்த்தைப் போர் மூண்டுள்ளது எனலாம்.
அவ்வகையில், கம்பீரின் இந்த பேட்டி குறித்து பாகிஸ்தான் ஆல் ரவுண்டரும், முன்னாள் கேப்டனுமான ஷாகித் அஃப்ரிடி, ‘இப்படியெல்லாம் கம்பீர் பேசும் போது புத்தியுடன் பேசுகிறார் என்று நினைக்கிறீர்களா? படித்தவர்கள் யாராவது இப்படி எல்லாம் பேசுவார்களா?’ என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.