'வந்துட்டோம்.. இனி களத்துல எறங்குறதுதான் பாக்கி'.. உலகக் கோப்பை இந்திய அணியின் வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | May 23, 2019 08:00 AM

மிக அண்மையில்தான் இந்தியாவில் நிகழ்ந்த ஐபிஎல் சீசன் 12 முடிவடைந்த நிலையில் இந்திய அணி உட்பட உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து அணிகளும் உலகக்கோப்பை போட்டிகளில் மோதுவதற்கு தயார் நிலையில் உள்ளன.

Watch:Team india arrives england for cricketworldcup2019 BCCI Video

ஐபிஎல் போட்டிகளில் தோனி, கோலி, ரோஹித் உள்ளிட்ட இந்திய வீரர்களின் தலைமையிலான வெவ்வேறு ஐபிஎல் அணிகள் மோதிக்கொண்டன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையடுத்து இந்திய அணியை உலகக் கோப்பைக்காக தயார்படுத்தும் தீவிரமான பணியில் இந்திய அணி நிர்வாகம் ஈடுபட்டது. முன்னதாக இந்திய அணி டெஸ்ட் மேட்சில் விளையாடிக் கொண்டிருந்தபோதே, உலக கோப்பையில் பங்கேற்று சிறப்பாக விளையாடுவதற்காக, கோலிக்கு ஓய்வும் அளிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் கோலி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவதற்கு ஆயத்தம் ஆகியுள்ளது.

இதுபற்றி பேசும்பொழுது உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கு உத்திகளைச் சொல்லிக் கொடுக்கும் பயிற்சி வகுப்பின் முக்கிய பொறுப்பில் தோனி, ரோஹித் ஆகிய இரு வீரர்களின் பங்களிப்பு இருக்கும் என்று கோலி கூறியிருந்தார். மேலும் உலகம் முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் தோனி மற்றும் கோலியின் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு கருத்துக்களையும் கூறினர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் இங்கிலாந்துக்கு புறப்பட்ட இந்திய அணி, இந்தியாவில் செய்தியாளர்களை சந்தித்தபோது, மிகவும் அழுத்தமான, நெருக்கடியான சூழலை சமாளிக்கவும் எதிர்கொள்ளவும் வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் கோலி தன்னம்பிக்கையுடன் பேசினார். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்தில் 30-ஆம் தேதி தொடங்கவுள்ள உலகக் கோப்பையில் விளையாடும் நிமித்தம், இந்திய அணி வீரர்கள் பிரத்யேக பேருந்தில் அந்நாட்டுக்குச் சென்றிறங்கும் வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது.