'என்னைக் குறிவைத்து அவர் சொல்லல.. அவர் வலி எனக்குத் தெரியும்'..நெகிழவைத்த வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | May 26, 2019 12:43 PM
இன்னும் 4 நாட்களில் உலகக் கோப்பை மேட்ச் தொடங்கி, தொடக்க ஆட்டத்திலேயே தென் -ஆப்பிரிக்காவுடன் இந்திய அணி மோதவுள்ள நிலை நெருங்கிவிட்டபோதிலும், இந்திய அணி வீரர்கள் தேர்வு விஷயத்திலான சர்ச்சை இன்னும் ஓயவில்லை.

முன்னதாக இந்திய அணி வீரர்கள் ரிசப் பந்த் மற்றும் அம்பாதி ராயுடு ஆகிய இருவருக்கும் பதிலாக, தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கர் இருவரும்ட் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து முறையான விளக்கத்தினை தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உட்பட பலரும் பல நிலைகளில் கூறியுள்ளனர்.
அதில் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தனது விளக்கத்தில், விக்கெட் கீப்பிங் மட்டுமல்லாமல் சில அனுபவ மிகுதிகளினால் ரிஷப் பந்துக்குப் பதில் தினேஷ் கார்த்திக்கும், அம்பதி ராயுடுவை விடவும் கொடுத்த வாய்ப்புகளை பயன்படுத்தி பேட்டிங், பீல்டிங், பௌலிங் என மூன்று டைமன்சன்களிலும் (3டி) விஜய் சங்கர் சிறப்பாக விளையாடுவதாகவும் தெளிவுபடுத்தியிருந்தார்.
இதை சுட்டிக்காட்டும் வகையில், தனது ட்வீட்டில், ‘உலகக் கோப்பை மேட்சைக் காணுவதற்காகவே சிறப்பு 3டி கண்ணாடி ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறேன்’ என்று அம்பாதி ராயுடு பதிவிட்டது சர்ச்சைக்குள்ளானது. ஆனால் இதுபற்றி பேசியுள்ள வீரர் விஜயசங்கர், ‘உலகக் கோப்பைக்குத் தேர்வாகாத ஒரு வீரரின் வலியை, தான் நன்றாக உணருவதாகவும், தன் வலி உணர்வை வெளிப்படுத்தும் விதமாக அம்பாதி ராயுடு அவ்வாறு பதிவிட்டிருக்கலாமே தவிர, என்னைக் குறி வைத்து அவர் அவ்வாறு பதிவிடவில்லை என தெரியும்’ என்று தன்மையுடன் பேசியுள்ளார்.
