‘எத்தனையோ சேலஞ்ல ஜெயிச்சும் இத மிஸ் பண்ணிட்டாரே’.. வைரலாகும் ‘ஹிட்மேன்’ வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 24, 2019 05:28 PM

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா விளையாடும் வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

WATCH: Rohit Sharma takes the steady hand challenge

12 -வது உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து நாட்டில் வரும் 30 -ம் தேதி தொடங்க உள்ளது. இதில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. அதற்கு முன்னர் செய்தியார்களுக்கு பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்த வருடம் நடபெற உள்ள உலகக்கோப்பை தொடர் மிகவும் சவலானதாக இருக்கும். அதனால் எதிரணியை சமாளிக்க தூண் போல குல்தீப் யாதவ், சஹால் ஆகிய இரு சுழற்பந்து வீச்சளார்கள் உள்ளனர் என தெரிவித்திருந்தார்.

மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் உலகக்கோப்பையில் விளையாட உள்ள இந்திய அணிக்கு சில அறிவுரைகளை வழங்கி இருந்தார். அதில், விராட் கோலி ஒரு வீரர் சிறப்பாக விளையாடினால் மட்டும் ஒரு தொடரை வென்றுவிட முடியாது. அனைத்து வீரர்களின் ஒத்துழைப்பு எல்லா போட்டிகளிலும் இருந்தால் மட்டுமே ஒரு அணி வெல்ல முடியும் என தெரிவித்திருந்தார். அதேபோல் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் அறிவுரை வீரர்களுக்கு கூடுதல் பலமாக இருக்கும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் ‘ஹிட்மேன்’ என அழைக்கப்படும் ரோஹித் ஷர்மா விளையாடும் வீடியோ ஒன்றை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Tags : #ICCWORLDCUP2019 #BCCI #ICC #ROHITSHARMA #MENINBLUE