'என்ன பீலிங்கா'...'எனக்கு தாண்டா பீலிங்கு'... 'பிரபல வீரருக்கு நேர்ந்த கதி'...வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | May 23, 2019 08:02 AM
பயிற்சி ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா படுகாயம் அடைந்திருப்பது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.இதற்காக அந்நாட்டிற்கு சென்றுள்ள ஒவ்வொரு அணிகளும் தற்போது பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.அந்த வகையில் சவுதாம்டனில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின.
இதில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் ஆந்த்ரே ரஸல் பந்துவீசினார்.அப்போது ரஸல் வீசிய பவுன்சர் பந்து உஸ்மான் கவாஜாவின் தாடையை பதம் பார்த்தது.இதனால் வலியால் துடித்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இது ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.இருப்பினும் ’இது பெரிய காயமில்லை என்பதால் பயப்பட வேண்டியதில்லை’ என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தெரிவித்துள்ளது.இதனால் அவர் உலகக்கோப்பையில் ஆடுவதில் எந்த வித சிக்கலும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Injury scare for Usman Khawaja after being hit by bouncer in WC trial game.#9wwos #cricket #cwc19 pic.twitter.com/npWC7FmZ0k
— Wide World of Sports (@wwos) May 23, 2019