‘நாங்க இப்டிதான் உலகக்கோப்பைல விளையாடுவோம்’!.. ‘இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் பற்றி கூறும் முன்னாள் வீரர்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Arunachalam | May 26, 2019 08:44 PM
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி குறித்து முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக் மனம் திறந்துள்ளார்.

இதில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக் கூறியதாவது, ‘இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் என்றாலே மக்கள் சீரியஸாக பார்க்கிறார்கள். அந்தப் போட்டிகள் கௌரவ போட்டியாகவே பார்க்கப்படுகிறது’. மேலும், எங்களால் இதுவரை உலகக்கோப்பையில் இந்தியாவை வெல்ல முடியவில்லை.
இதனால், ``உலகக்கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை. இந்தியாவை மட்டும் வென்றால் போதும்" என சிலர் கூறியுள்ளனர். இந்த மோசமான சாதனையை இந்த முறை முடிவுக்குக் கொண்டுவருவோம் என நம்புகிறேன். இந்நிலையில், அதற்கு ஏற்றாற்போல் வலுவான அணியைத் தேர்வு செய்துள்ளோம். இந்தியாவை வீழ்த்தினால் மட்டுமே எங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும்.
மேலும், அதனால் இந்தியாவுடனான மேட்சை சாதாரண போட்டியாக நினைத்து விளையாட மாட்டோம். இந்தியாவை மட்டுமல்ல எந்த அணியை வீழ்த்தும் திறன் எங்கள் வீரர்களுக்கு இருக்கிறது. இந்நிலையில், நிறைய அழுத்தங்களுக்கு மத்தியில் கவனமாக செயல்பட்டு நல்ல ஒரு டீமை தேர்வு செய்துள்ளோம். பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் உடன் தோற்றாலும் முதல்போட்டியில் வெற்றியுடன் தொடங்க நினைக்கிறோம்.
உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் முதல் போட்டியின் வெற்றி என்பது மிக முக்கியமானது. அதனைப் பெறுவதற்கான தகுதி எங்களிடம் இருக்கிறது. மேலும், எனது கணிப்பின்படி பார்த்தால், இந்த முறை, இந்தியா, பாகிஸ்தான் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு வர வாய்ப்பு இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
