'நாங்க எப்போமே 'ஜென்டில்மேன் கேம்' தான்'... இணையத்தை தெறிக்க விட்ட 'இந்திய வீரர்' !
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | May 25, 2019 12:01 PM
இந்திய கேப்டன் விராட் கோலியும்,பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதுவும் கைகுலுக்கி கொள்ளும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், இங்கிலாந்தில் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, பயிற்சி ஆட்டங்கள் நேற்று தொடங்கின.இதன் இரண்டாவது நாளான இன்று, லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கும் போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதனிடையே விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டிருப்பது இந்திய ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை அளித்துள்ளது.
இதனிடையே இந்திய கேப்டன் கோலியும் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதுவும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர்.புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனிடையே உலககோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட இருக்கிறது.இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இருவரும் கைகுலுக்கி கொள்ளும் புகைப்படத்தை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
#spiritofcricket 🤝 pic.twitter.com/1UkHSDxmx5
— Cricket World Cup (@cricketworldcup) May 25, 2019
