‘29 வருஷத்துக்கு முன்னாடி இதே நாள்’.. சச்சின் கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Aug 14, 2019 02:06 PM
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின், டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்த முதல் சதம் குறித்து பிசிசிஐ ட்வீட் செய்துள்ளது.
கிரிக்கெட்டின் ஜாம்பவான் என அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார். கடந்த 1989 -ம் ஆண்டு தனது 16 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் அடியெடுத்து வைத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 100 சதங்களை சச்சின் எடுத்துள்ளார். இதில் 51 சதங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலும், 49 சதங்கள் ஒருநாள் கிரிக்கெட்டிலும் எடுத்து அசத்தியுள்ளார். கடந்த 2013 -ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் அடித்த முதல் சதம் குறித்த பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. கடந்த 1990 -ம் ஆண்டு ஆகஸ்ட் 14 -ம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 189 பந்துகளில் 17 பவுண்டரிகள் விளாசி 119 ரன்கள் எடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அப்போது சச்சினுக்கு வயது 17 என்பது குறிப்பிடத்தக்கது.
#ThisThatDayYear: Rewind to 1990 and the world witnessed @sachin_rt's maiden international ton. At the tender age of 17, the little master scored his first ton in whites at Old Trafford. What a moment! pic.twitter.com/u1CrB0qkl2
— BCCI (@BCCI) August 14, 2019