‘148 கிமி வேகத்தில் வந்த பந்து’.. ‘கழுத்தில் விழுந்த பலத்த அடி’.. மைதானத்திலேயே விழுந்த பிரபல வீரர்..! வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 18, 2019 05:03 PM

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் கழுத்தில் பந்து பலமாக விழுந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Smith retires hurt after being hit by Jofra Archer’s bouncer

இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களை எடுத்து தடுமாறியது. ஆனாலும் ஸ்மித் தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை திணறடித்து வந்தார்.

அப்போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்சர் பந்து வீச களமிறங்கினார். அவரின் ஓவரில் வந்த பவுன்சர் ஸ்மித்தின் முழங்கையில் பலமாக அடித்து காயத்தை ஏற்படுத்தியது. அதனால் மருத்துவர்கள் மைதானத்துக்கு வந்து ஸ்மித்துக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் கையில் ப்ளாஸ்ட்ருடன் ஸ்மித் விளையாட ஆரம்பித்தார்.

இந்நிலையில் இன்னிங்ஸின் 77 -வது ஓவரை வீச ஜோப்ரா ஆர்சர் மீண்டும் வந்தார். அந்த ஓவரின் முதல் பந்தை ஸ்மித் பவுண்டரிக்கு அனுப்பினார். ஆனால் அடுத்த பந்து ஸ்மித்தின் கழுத்து பகுதியில் பலமாக தாக்கியது. இதனால் மைதானத்திலேயே ஸ்மித் கீழே விழுந்தார். இதனை அடுத்து உடனடியாக மைதானத்துக்கு மருத்துவர்கள் வந்து ஸ்மித்தை சோதித்துப் பார்த்தனர். காயம் பலமாக இருந்ததால் போட்டியின் பாதியிலேயே ஸ்மித் பெவிலியன் திரும்பினார்.

Tags : #ICC #STEVESMITH #INJURY #JOFRAARCHER #NECK #AUSTRALIA #ASHES2019 #TEST #ENGLAND #CRICKET