‘கிட்ட நெருங்கியாச்சு’... ‘தோனியின் சாதனையை சமன் செய்ய'... 'காத்திருக்கும் விராட் கோலி'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Aug 20, 2019 10:57 PM

கேப்டன்ஷிப்பில் தோனியின் டெஸ்ட் சாதனையை சமன் செய்ய, கேப்டன் விராட் கோலிக்கு இன்னும் ஒரு வெற்றிதான் தேவை.

Virat Kohli Closes In On MS Dhoni\'s Test Captaincy Record

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி கடந்த 2014-ம் ஆண்டு பொறுப்பேற்றார். அவரது தலைமையில் இந்திய டெஸ்ட் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பல ஜாம்பாவன்களின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை தன்வசப்படுத்தி வருகிறார் விராட் கோலி. தற்போது கேப்டன்ஷிப்பில் தோனியின் டெஸ்ட் சாதனையை சமன் செய்ய காத்திருக்கிறார். விராட் கோலி தலைமையில் இதுவரை 46 போட்டிகளில் 26-ல் இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது. தோனியின் தலைமையில் இந்திய அணி 60 போட்டிகளில் விளையாடி 27 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வரும் வியாழக்கிழமை தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்றால் விராட் கோலி, தோனியின் சாதனையை சமன் செய்வார். ஒருவேளை  2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றால்  டெஸ்ட் போட்டிகளில் கேப்டன்ஷிப்பில் அதிக வெற்றி பெற்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி தன்வசப்படுத்துவார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மண்ணில் தொடரை இழந்தது. ஆனால் முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்தது.

Tags : #VIRATKOHLI #MSDHONI #TEST #CHAMPIONSHIP #MATCH #TEAM #INDIA