#WATCH #VIDEO: 'சிக்ஸருக்கு போன பந்து'... 'அப்டியே பறந்துபோய்'... 'பவுண்டரியில் என்னா ஒரு கேட்ச்’... ‘சாகசம் காட்டிய சஞ்சு சாம்சன்'... 'கொண்டாடும் நெட்டிசன்கள்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Feb 02, 2020 05:29 PM

நியூசிலாந்து எதிரான 5-வது டி20 போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம், 5 போட்டிகளை கொண்ட தொடரை இந்திய அணி ஒயிட் வாஷ் செய்துள்ளது. இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் பிடித்த கேட்ச் ஒன்று வைரலாகி வருகிறது.

Sanju Samson Boundary Catch with fielding Effort of Airborne

நியூசிலாந்துக்கு எதிரான 5-வது டி20 போட்டி மவுண்ட் மவுங்கனியில் நடைப்பெற்றது. ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். டாஸ் வென்று முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர் முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.

அப்போது 8-வது ஓவரில், ஷர்துல் தாகூர் வீசிய பந்தை ராஸ் டெய்லர் சிக்சருக்கு பறக்கவிட்டார். அப்போது பவுண்டரி லைனில் இருந்த இளம் வீரர் சஞ்சு சாம்சன், கிட்டத்தட்ட பறந்துபோய் அந்த பாலை பிடித்ததுடன் துரிதமாக, கீழே விழுவதற்கு முன்னர் பாலை மைதானத்தில் வீசினார். இதனால், 4 ரன்களை சேமிக்க முடிந்தது. ரன்கள் எடுக்க தவறினாலும் அழகான கேட்ச் மூலம், சஞ்சு சாம்சனின் கேட்சை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

Tags : #CRICKET #SANJU SAMSON #IND VS NZ