‘உலகக்கோப்பையில இவரு எப்டி கலக்கப் போராரு பாருங்க’.. பிரபல வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 02, 2019 08:05 PM

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தோனியின் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமையும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

Dhoni to play a massive role for India at the World Cup, says Gavaskar

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக் கோப்பை தொடர் இன்னும் ஒரு சில வாரங்களில் இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் எந்த அணி உலகக் கோப்பையை வெல்லும் என பல முன்னணி வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் இதில் தோனியின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

தோனி குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது, ‘உலகக் கோப்பையில் தோனி இந்திய அணிக்கு ஒரு துருப்புச் சீட்டு. இவரின் அசாத்தியமான கீப்பிங்கைப் பற்றி அனைவருக்கும் தெரியும். இவர் கண் சிமிட்டும் நேரத்தில் பேட்ஸ்மேன்களை வீழ்த்தி விடுகிறார். அதே போல் கடைசி கட்டங்களில் ஃபீல்டிங்கில் வீரர்களை சரியான இடத்தில் வைப்பதில் தோனி கைதேர்ந்தவர். இது பல போட்டிகளில் விராட் கோலிக்கு உதவியாக இருந்திருக்கிறது. உலகக் கோப்பையிலும் அது தொடரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவரின் அனுபவங்களை இளம் வீரர்கள் பெற்று பயனடைய வேண்டும்’ என கவாஸ்கர் கூறியுள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #ICC #BCCI #TEAMINDIA #MSDHONI #GAVASKAR