ரிஷப் பண்ட், அம்பட்டி ராயுடு வரிசையில் உலகக்கோப்பைக்கு வரும் பிரபல வீரர்!.. கொண்டாடத்தில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 08, 2019 02:06 PM

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் உள்ள வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு பதிலாக விளையாடும் மாற்று வீரர்களின் பட்டியலில் மேலும் ஒரு வீரர் இணைந்துள்ளார்.

Ishant Sharma on standby for World cup 2019

மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கும் ஒருநாள் தொடருக்கான உலகக் கோப்பை தொடர் மே 30 முதல் இங்கிலாந்து நாட்டில் தொடங்க உள்ளது. இதற்கான இந்திய வீரர்களின் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதில் இளம் வீரர் ரிஷப் பண்ட் மற்றும் அம்பட்டி ராயுடு போன்ற வீரர்கள் இடம் பெறாதது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதனை அடுத்து உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு பதிலாக விளையாடும் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் ரிஷப் பண்ட், அம்பட்டி ராயுடு மற்றும் சைனி போன்ற வீரர்கள் இடம்பிடித்தனர். இந்நிலையில் அதே வரிசையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் ஷர்மாவும் இணைந்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி குறிப்பில் இடம்பெற்றுள்ளது.

மேலும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய இந்திய வீரர் கேதர் ஜாதவ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இதனால் தற்போது கேதர் ஜாதவ் உலகக்கோப்பையில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

Tags : #ICCWORLDCUP2019 #ISHANT SHARMA #BCCI