விளையாட்டின் உயரிய இந்திய விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள நட்சத்திர வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Arunachalam | Apr 28, 2019 12:16 PM
இந்திய கிரிகெட் வாரியம் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிகெட் வாரியம் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. இதில் ஆண்கள் அணியில் பும்ரா, ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது பெயர்களையும், பெண்கள் அணியில் பூனம் யாதவ்வின் பெயரையும் பரிந்துரைத்துள்ளது.
உச்ச நீதிமன்றம் அமைத்த கிரிக்கெட் நிர்வாகக்குழு கமிட்டி புதுடெல்லியில் இது குறித்து ஆலோசித்தது. இதில், இக்கமிட்டியின் பொது மேலாளர் சபா கரிம் கலந்து கொண்டார். இதில் பும்ரா இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளராக இருக்கிறார் என்றும் 2019 உலகக் கோப்பையின் இந்தியாவின் நம்பிக்கை பந்துவீச்சாளர் இவர்தான் என்றும் அக்கமிட்டியின் பொது மேலாளர் சபா கரிம் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய கிரிக்கெட் வீரர் ஷமி அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் அபாரமான ஃபார்மில் உள்ளார். அதேபோல் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இடம்பெற்று வந்த ஜடேஜா, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் கம்பேக் தந்து அசத்தி வருகிறார் என்றும் கூறியுள்ளார்.
