திருப்பதில சாமி கும்பிட வந்த கிரிக்கெட் பிரபலங்கள்! செல்ஃபி எடுக்க சூழ்ந்த மக்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Arunachalam | May 09, 2019 06:09 PM

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான தினேஷ் கார்த்திக்கும், ரோகித் சர்மாவும் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

Indian cricket players rohit and dinesh visit tirupati temple

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனுமான ரோகித் சர்மா தனது ரித்விகா மற்றும் குழந்தை சமைரா ஆகியோருடன் வந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த தினேஷ் கார்த்திக் குடும்பத்தினருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர்.

இதேபோல் இந்திய அணியின் மற்றொரு வீரரும், ஐபிஎல் தொடரில் கோல்கட்டா அணியில் விளையாடும் தினேஷ் கார்த்திக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இந்நிலையில், திருப்பதி கோவிலுக்கு வந்திருந்த கிரிக்கெட் வீரர்களுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்து கொண்டனர்.

Tags : #MUMBAI-INDIANS #KOLKATA-KNIGHT-RIDERS #ICC #DINESHKARTHIK #ROHIT SHARMA #TIRUPATI #TEMPLE #DARSHAN