'அவர் தான் இந்திய அணியின் பெரிய சொத்து'... 'உலகக் கோப்பை'யில எப்படி... கலக்கப் போறாருனு பாருங்க.. மனம் திறந்த முன்னாள் வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | May 08, 2019 06:23 PM

உலகக் கோப்பை 2019 குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.

Combination of youth and experience will help India in the World Cup

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் துவங்கவுள்ளது. இத்தொடரில் எந்த அணி வெல்லும், யார் சிறப்பாக செயல்படுவார் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் உலகக் கோப்பை குறித்த தமது கணிப்பை தெரிவித்துள்ளார்.

அதில், 'இம்முறை உலகக் கோப்பைக்கான இந்திய அணி சிறப்பாக உள்ளது. இந்த அணியில் நல்ல அனுபவமுள்ள வீரர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளனர். அதனால் அணி சரியான வீரர்களை கொண்டுள்ளது. இந்திய அணி லீக் சுற்று முடிவில் 4 இடங்களுக்குள் வருவது நிச்சயம். அதற்குப் பின் இந்திய அணியின் நிலைமை சற்று கடினம்தான். ஏனென்றால் இம்முறை முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அனைத்தும் சமநிலையுடன் இருக்கும்.

இதனால் அவர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும். என்னைப் பொருத்தவரை இம்முறை இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து முதல் 3 இடங்களை நிச்சயம் பிடிக்கும். நான்காவது இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இடையே கடுமையான போட்டியிருக்கும். இந்த உலகக் கோப்பையில் யாரும் எதிர்பாரதவிதமாக மேற்கிந்திய தீவுகள் அணி செயல்படும்' என நம்புகிறேன்.

'இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். அத்துடன் இங்கிலாந்தில் வேகப்பந்து வீச்சிற்கு நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும் என்பதால் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அது கைக்கொடுக்கும். பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் நன்றாக பந்துவீசி வருகிறார்கள். இவர்கள் இம்முறை சிறப்பாக செயல்படுவார்கள். அதேபோல் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்கு முக்கிய சொத்தாக இருப்பார்' என்று கபில் தேவ் கூறியுள்ளார்.

'அதனால் அவருக்கு அதிக அழுத்தத்தை ரசிகர்கள் தரக்கூடாது என்றும் கபில்தேவ் வலியுறுத்தியுள்ளார். ஜூன் 5-ம் தேதி சௌதாம்பிட்டனில் தென் ஆப்பிரிக்காவை இந்தியா எதிர்கொள்கிறது.

Tags : #KAPILDEV #HARDIKPANDYA #ICC