‘எந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கும் கிடைக்காத பெருமை’.. புதிய சாதனையை படைத்த ‘கிங்’கோலி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 20, 2019 09:11 PM

சமூக வலைதளங்களில் அதிக ஃபாலோவர்களை கொண்ட முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி படைத்துள்ளார்.

Virat Kohli becomes first cricketer to reach 100 million followers

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் கிரிக்கெட் வீரர்களுள் விராட் கோலிக்குதான் முதல் இடம். ஒவ்வொரு நிகழ்வுகளையும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு தன்னை ஃபாலோ செய்பவர்களை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.

தற்போது சமூக வலைதளங்களில் 100 மில்லியன் ஃபாலோவர்கள் கொண்ட முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோலி அடைந்துள்ளார். விராட் கோலியின் இன்ஸ்டாகிராமில் 33.6 மில்லியன் ஃபாலோவர்களும், ட்விட்டரில் 29.5 மில்லியன் ஃபாலோவர்களும், ஃபேஸ்புக்கில் 37 மில்லியன் ஃபாலோவர்களும் உள்ளனர். அதேபோல் கோலி தனது இன்ஸ்டாகிராமில் 92 பேரையும், ட்விட்டரில் 52 பேரையும் ஃபாலோ செய்கிறார்.

கடந்த 2018 -ம் ஆண்டு கர்வா சௌத் என்ற நிகழ்வின் போது விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவிட்டார். இது அப்போது சுமார் 21 லட்சத்துக்கு மேற்பட்டோரால் லைக் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அதிக ரீ-ட்வீட்களை பெற்று அந்த வருடத்தின் ‘கோல்டன் ட்வீட்’ என்ற பட்டத்தையும் பெற்று அசத்தியது.

Tags : #VIRATKOHLI #MILESTONE #TEAMINDIA #SOCIALMEDIA