‘4 -வது ஆர்டர்ல விளையாட இவர்தான் கரெக்ட்’.. ‘அந்த டெக்னிக் அவருக்குதான் தெரியும்’.. இந்தியாவுக்கு அட்வைஸ் பண்ண ஆஸ்திரேலிய வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 20, 2019 05:54 PM

இந்திய அணியில் நான்காவது ஆர்டரில் விளையாடும் வீரர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் சைமன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

World Cup 2019: Simon Katich names his pick for India’s number 4 slot

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக்கோப்பை தொடர் இந்த மாதம் 30 -ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. அதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் காயம் அடைந்த இந்திய அணியின் ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவும் அணிக்கு திரும்பியுள்ளார்.

இந்திய அணியைப் பொறுத்தவரை நான்காவது ஆர்டரில் விளையாடும் வீரர் குறித்து பல முன்னாள் வீரர்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதில், நான்காம் வரிசையில் விஜய் சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக் இறங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இவர்கள் இருவர் இல்லாமல் கே.எல்.ராகுல் இறங்கவும் வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் சைமன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில்,‘என்னைப் பொறுத்தவரை நான்காவது வரிசையில் களமிறங்க தினேஷ் கார்த்திக் தான் சரியான வீரர். அவர் களத்தில் நிலைத்து நின்றுவிட்டால், அதன்பின்னர் அவருக்கு பந்து வீசுவது சிரமம்தான். அவரின் பேட்டிங் டெக்னிக்கும், டைமிங்கும் அபாரமாக இருக்கும்’ என சைமன் தெரிவித்துள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #DK #DINESHKARTHIK #TEAMINDIA #SIMON KATICH