'மாப்ள போட்டோ ஒண்ணுதான்.. ஆனா பேர்தான் வேற வேற'.. திருமண தகவல் மையங்கள் மூலம் கோடிக்கணக்கில் மோசடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 16, 2019 07:42 PM

திருவண்ணாமலையில் சக்கரவர்த்தி என்பவர் திருமண தகவல் மையத்தில் தனது ஒரே புகைப்படத்தை வெவ்வேறு பெயர் மற்றும் விபரங்களைக் கொடுத்து பதிவு செய்துள்ளார்.

men arrested for cheating women using marriage information agencies

இவ்வாறு பதிவு செய்யப்பட்டதால், இவருக்காக வரன் தேடும் சாக்கில் முதிர் கன்னிகள், படித்த பெண்கள், கணவரை இழந்துவிட்டோ, பிரிந்துவிட்டோ மறுமணத்துக்காக தங்களது விபரங்களைத் தந்துள்ள பெண்கள் உள்ளிட்டோரை டார்கெட் செய்து அவர்களைத் தொடர்பு கொண்டிருக்கிறார்.

பின்னர் அவர்களைத் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி அவர்களின் நன்னம்பிக்கையைச் சம்பாதித்து, அவர்களிடம் பல கோடிக் கணக்கில் பண மோசடி செய்துள்ளார். சந்தேகப்பட்டவர்களும், இவரால் ஏமாற்றப்பட்டவர்களும் இவர் மீது காவல் நிலையங்களில் வெவ்வேறு இடங்களில் புகார் அளித்தும், இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பின்னர் திருச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில், நீதிபதி நிஷா பானு, நீதிபதி தண்டபாணி உள்ளிட்டோரின் தலைமையிலான மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிமன்ற அமர்வு இவ்வழக்கை விசாரித்ததோடு, சக்ரவர்த்தியையும், இந்த மோசடிகளுக்கு துணையாக இருந்த அவரது நண்பரையும் கைது செய்வதற்கு உத்தரவிட்டனர். அதன்பின்னர் காவல்துறையினர் சக்ரவர்த்தியைக் கைது செய்துள்ளனர்.

Tags : #FRAUD #CHEAT #MARRIAGE #MAN