‘60 வருடம், 7000 விக்கெட்’.. பிரமிக்க வைத்த 85 வயது கிரிக்கெட் வீரர்..! யார் இவர்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 29, 2019 09:07 AM

60 வருடமாக கிரிக்கெட் விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் செசில் ரைட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்துள்ளார்.

West Indies fast bowler Cecil Wright announce retirement at 85

வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் செசில் ரைட். அந்நாட்டின் கிரிக்கெட் ஜாம்பவான்களான விவியன் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ் உள்ளிட்ட வீரர்களுடன் விளையாடியுள்ளார். கடந்த 1959 -ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற லான்கா ஷையர் லீக் போட்டியில் விளையாட சென்றவர், அங்கேயே தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடர ஆரம்பித்தார்.

அங்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 7000 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 85 வயதான செசில் கேரி, அடுத்த மாதம் நடைபெற உள்ள ஸ்பிரிங்ஹெட் அணிக்கு எதிரான போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த அவர், ‘இவ்வளவு நாள் நான் கிரிக்கெட் விளையாடி வருவதற்கு காரணம், காயம் இல்லாமல் உடலை சரியாக கவனித்துக்கொண்டதுதான். உணவுவைப் பொறுத்தவரை எதையும் சாப்பிடுவேன். அதிகமாக மது குடிக்க மாட்டேன், எப்போதாவது பீர் மட்டும் குடிப்பேன். உடற்பயிற்சி செய்யாமல் இருந்ததேயில்லை. டிவி முன் அமர்ந்தது இல்லை’ என தெரிவித்துள்ளார்.

Tags : #CARIBBEAN #WESTINDIES #FASTBOWLER #CECILWRIGHT #RETIREMENT #CRICKET