‘3 முக்கிய வீரர்கள் மிஸ்ஸிங்’.. ‘ஒரு தமிழக வீரருக்கு அணியில் இடம்’.. வெளியான தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய வீரர்கள் பட்டியல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 29, 2019 10:55 PM

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ள இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

India T20I squad for South Africa, no MS Dhoni, Jasprit Bumrah

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி வரும் செப்டம்பர் மாதம் 15 -ம் தேதியும், அதனை அடுத்தப் போட்டிகள் 18 -ம் தேதி தர்மசலாவிலும், 22 -ம் தேதி பெங்களூரிலும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் விக்கெட் கீப்பர் தோனிக்கு மீண்டும் ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா மற்றும் புவனேஷ்வர்குமார் ஆகிய இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு ஆல்ரண்டர் ஹர்திக் பாண்ட்யா சேர்க்கப்பட்டுள்ளார். இதில் தமிழக வீரர் வாசிங்டன் சுந்தருக்கு இடம் கிடைத்துள்ளது. மேலும் ராகுல் சஹார், தீபக் சஹார், கலீல் அகமது, நவ்தீப் சைனி உள்ளிட்ட இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tags : #BCCI #ICC #MSDHONI #HARDIKPANDYA #TEAMINDIA #INDVSA #T20I #BUMRAH