வயிற்றுவலி, காய்ச்சலால் 'அவதிப்படும்' வீரர்கள்... தோத்துருவோமோன்னு 'பயமா' இருக்கு... நீங்க ரெண்டு பேரும் உடனே 'கெளம்பி' வாங்க!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை நியூசிலாந்து அணி வென்றுள்ள நிலையில் நாளை இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தொடரை இழந்து விட்டாலும் ஆறுதல் வெற்றிக்காக இந்தியாவும், ஒயிட் வாஷ் செய்ய வேண்டும் என நியூசிலாந்து அணியும் கடுமையாக போராடும். எனவே நாளைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நியூசிலாந்து அணி தற்போது வீரர்கள் பற்றாக்குறையால் அவதிக்கு உள்ளாகி வருகிறது. கடந்த போட்டியிலேயே இது வெட்ட வெளிச்சத்துக்கு வந்து விட்டது. அந்த அணியின் மாற்று வீரர் களமிறங்க முடியாததால் பீல்டிங் கோச்சை இந்தியாவுக்கு எதிராக களமிறக்கினர். அந்த அணியின் டிம் சவுத்தி, சாண்ட்னர் ஆகியோர் வயிற்று வலியாலும், குஜிலீசென் காய்ச்சலாலும் அவதிப்பட்டு வருகிறார்.
தோள்பட்டை காயம் காரணமாக கனே வில்லியம்சன் முதலிரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. நாளைய போட்டியில் அவர் களமிறங்குவது இன்னும் உறுதியாகவில்லை. இதனால் இந்தியா ஏ அணியுடன் விளையாடி வரும் இஷ் சோதி மற்றும் பிளையர் டிக்னர் இருவரும் நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் இருவரும் நாளைய போட்டியில் மாற்று வீரர்களாக களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
