2003ல் 'டிராவிட்'... 2020ல் 'கே.எல்.ராகுல்'... ஸ்டம்பிங்கில் தோனியின் வேகம்... இந்திய அணிக்கு கிடைத்த 'ஜாக்பாட்'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Suriyaraj | Jan 21, 2020 04:54 PM

2003 உலகக் கோப்பையின் போது கங்குலி டிராவிட்டை கீப்பிங் செய்யச்  சொன்னது போல், தற்போது விராட் கோலி, ராகுலை கீப்பிங் செய்யச் சொன்னது வொர்க்அவுட் ஆகியிருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் கருத்தக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Fans are happy that Rahul has got the Indian team like Dravid

2003 உலகக் கோப்பையின்போது அணியில் காம்பினேஷன் சரியாக வர வேண்டும் என்பதற்காக கங்குலி டிராவிட்டை கீப்பிங் செய்யச் சொன்னார். டிராவிட்டும் அணிக்காக அந்தப் பணியை செய்தார்.  அதன் பிறகு பல போட்டிகளில் டிராவிட்டின் அசத்தல் கீப்பிங் அணியின் வெற்றிக்கு வழி வகுத்தது என்றே சொல்லலாம்.

அதேபோல், தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரிஷப் பந்துக்கு பதிலாக கே.எல்.ராகுலை கீப்பிங் செய்ய கேப்டன் விராட் கோலி அழைத்தார்.

முதல் போட்டியில் பன்ட் தலையில் அடிபட்டு வெளியேற, பேக்கப் கீப்பராக களம் கண்ட ராகுல், தனது அசாத்திய  விக்கெட் கீப்பிங்கினால் முதல் சாய்ஸ் விக்கெட் கீப்பர் அளவுக்கு செயல்பட்டார். இரண்டாவது போட்டியில் ஃபிஞ்சை ஸ்டம்பிங் செய்தது தோனியை நினைவுபடுத்தியதாக ரசிகர்கள் பலரும் சிலாகித்து குறிப்பிட்டனர்.

ஐபிஎல், மாநில போட்டிகளின் கீப்பிங் அனுபவத்தை மனதில் வைத்து, `இது தொடரும்' என்று கூறி ராகுலுக்கு பெரும் பொறுப்பை அளித்திருக்கிறார் கோலி. ராகுல் நல்ல பேட்ஸ்மேனாகவும், ஒரு நல்ல விக்கட் கீப்பராகவும் இந்திய அணியில் டிராவிட்டின் இடத்தை நிறைவு செய்வார் என்றே ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.

Tags : #KLRAHUL #K.L. RAHUL #DRAVID #KOHLI #DHONI #CRICKET #INDIA AUSTRALIA MATCH