"அந்த 2 பேரும் வேணாம்... புதுசா ரெண்டு பேர நாளைக்கி எறக்குறோம்..." 'கடைசி' போட்டியில் 'மாஸ்' பிளான் போட்டு தயாராகும் 'இந்திய' அணி??!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி, முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ள நிலையில், நாளை நடைபெறும் கடைசி ஒரு நாள் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.
முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் மிகப் பெரிய தவறாக அவர்களின் பந்து வீச்சு பார்க்கப்பட்டது. அதிகம் பேட்ஸ்மேன்கள் உள்ள இந்திய அணியில் பவுலர்கள் குறைவாக உள்ளனர். இதன் காரணமாக, அடுத்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக, கூடுதல் ஒரு பந்து வீச்சாளரை இந்திய அணி களமிறக்க முயற்சிக்கும். இதனால் ஷ்ரேயாஸுக்கு பதிலாக, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு மாற்றமாக இந்திய அணியில் தற்போது இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் சைனியை மாற்றக் கூடும். இரண்டு போட்டிகளிலும் சேர்த்து ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்துள்ள சைனி, இரண்டு போட்டிகளிலும் அதிக ரன்களை வாரி வழங்கினார். இதனால் அவருக்கு பதிலாக நடராஜன் களமிறங்குவார் என கருதப்படுகிறது.
வலைப்பயிற்சியில் நடராஜன் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், பும்ரா, ஷமி ஆகிய வலது கை வேகப்பந்து வீச்சாளர்களுடன் இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் இணையும் போது நிச்சயம் ஆஸ்திரேலிய அணிக்கு சவாலாக இந்திய அணி விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.