"நீங்க டீம் 'கேப்டன்'ங்க... நீங்களே இப்படி சொல்றது நல்லாவா இருக்கு??... எனக்கு ரொம்ப 'வருத்தம்'பா..." 'கோலி' - 'ரோஹித்' விவகாரத்தில் அடுத்த 'ட்விஸ்ட்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் காயம் காரணமாக ரோஹித் ஷர்மா இடம்பெறாமல் போனது கடும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, காயத்தில் இருந்து ரோஹித் உடல்நலம் தேறி வருவதால் அவர் டெஸ்ட் தொடரில் கலந்து கொள்வார் என்றும், அதன்பிறகு முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடமாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ரோஹித் ஷர்மா அணியில் இடம்பெறாமல் போனது குறித்து முதல் முறையாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று மனம் திறந்தார். ரோஹித் விஷயத்தில் ஒரு தெளிவில்லை என்றும், அவர் ஏன் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா வரவில்லை என்பதும் தெரியவில்லை என்றும் தெரிவித்தார். அவர் காயத்துடன் துபாயில் இருந்து ஆஸ்திரேலியா வந்திருந்தால், அதற்கான சிகிட்சையை மேற்கொண்டு டெஸ்ட் தொடருக்கு அவர் தயாராகி இருக்கலாம் எனவும் விராட் கோலி குறிப்பிட்டார்.
இந்நிலையில், ரோஹித் ஷர்மா குறித்து கோலி தெரிவித்த கருத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா ஏற்க மறுத்துள்ளார். 'அனைவரையும் போல நானும் கோலி கருத்தைக் கேட்டு சற்று ஏமாற்றமடைந்தேன். எனக்கு இது புரியவேயில்லை. விராட் மற்றும் ரோஹித் இதுகுறித்து பேசியிருக்க வேண்டும். அல்லது அணியின் கேப்டனான விராட் ரோஹித்திடம் விசாரித்திருக்க வேண்டும். அதே போல, ரோஹித்தாவது கோலியை தொடர்பு கொண்டிருக்க வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அனைவருக்கும் எளிதாக உள்ள போது, இது போன்ற சம்பவங்களில் நேரடியாக தொடர்பு கொள்ளாமல் போனது வேதனையளிக்கிறது' என நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
