'பெரிய தப்பு நடந்து போச்சு... என்ன மன்னிச்சுடுங்க'!.. மேட்ச்சின் நடுவே நடந்த ட்விஸ்ட்!.. ஷாக் ஆன இந்திய வீரர்கள்!.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட கில்கிறிஸ்ட்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் போட்டியில் இன்று நடந்த சம்பவம் ஒன்று பெரிய சர்ச்சையாகி உள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இரண்டு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தற்போது சிட்னியில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் இறங்கி நிதானமாக ஆடி வருகிறது.
ஆஸ்திரேலிய தொடருக்காக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்று இருக்கும் வீரர் முகமது சிராஜ் தற்போது பெவிலியனில் அமர்ந்து ஆட்டத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறார். இவரின் அப்பா கடந்த சில நாட்களுக்கு முன் மரணம் அடைந்தார்.
இவர்தான் முகமது சிராஜ் கிரிக்கெட் விளையாட வறுமையிலும் ஊக்குவித்தார். வறுமையான பின்னணி இருந்த போதும் கூட முகமது சிராஜ் கிரிக்கெட் விளையாட அவரின் அப்பாதான் அனுமதித்தார்.
இதற்கிடையே முகமது சிராஜ் இந்திய கிரிக்கெட் தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில், அவரின் அப்பா இயற்கை எய்தி உள்ளார். ஆனாலும் கிரிக்கெட் தொடர் முக்கியம் என்பதால் முகமது சிராஜ் ஆஸ்திரேலியாவில் இருந்து இறுதி சடங்கிற்கு கூட இந்தியா வரவில்லை.
இந்த நிலையில்தான் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் போட்டியில் இன்று நடந்த சம்பவம் ஒன்று பெரிய சர்ச்சையாகி உள்ளது. இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணியில் நவ்தீப் சைனி இடம் பிடித்துள்ளார்.
இந்த போட்டியை ஆஸ்திரேலிய ஜாம்பவான் வீரர் கில்கிறிஸ்ட் மற்றும் சிலர் ஆங்கிலத்தில் வர்ணனை செய்து வருகிறார்கள். இன்று வர்ணனையில் நவ்தீப் சைனியின் அப்பா இறந்துவிட்டார் என்று கூறிய கில்கிறிஸ்ட், அவருக்கு அனுதாபம் தெரிவித்தார்.
முகமது சிராஜ் அப்பா இறந்ததற்கு சைனியின் அப்பா இறந்து விட்டதாக கில்கிறிஸ்ட் நினைத்து இருக்கிறார். இதனால் சைனி ஓவர் போட வரும் போதெல்லாம் அவருக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் கில்கிறிஸ்ட் பேசினார். உடன் இருந்த வர்ணனையாளரும் சைனியின் அப்பா இறந்துவிட்டார் என்று நினைத்து உருக்கமாக பேசிக்கொண்டு இருந்தார்.
முகமது சிராஜ் அப்பா இறந்தது கூட தெரியாமல் இவர்கள் இப்படி உருக்கமாக பேசி வந்தனர். யாருக்கு என்ன நடந்தது என்று கூட தெரியாமல் இவர் இப்படி பேசியது பெரிய சர்ச்சையானது. கில்கிறிஸ்ட் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் வீரர்.
அவர் போய் இப்படி தவறாக வர்ணனை செய்தது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. வர்ணனைக்கு முன் அதற்கு உரிய சரியான ஹோம் ஒர்க் செய்துவிட்டு வாருங்கள் என்று கில்கிறிஸ்டுக்கு பலரும் அறிவுரை வழங்கி உள்ளனர்.

மற்ற செய்திகள்
