VIDEO : "நம்ம 'கல்யாணம்' பண்ணிக்கலாமா??.." பரபரப்பான 'மேட்ச்'க்கு மத்தியில்,,.. ஆஸ்திரேலிய 'காதலி'க்கு 'சர்ப்ரைஸ்' கொடுத்த 'இந்திய' ரசிகர்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Nov 29, 2020 04:14 PM

ஐபிஎல் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் போட்டிகளை விளையாடி வருகிறது.

indian fan proposes australia girl during ind vs aus match

மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் முதலில் நடைபெற்று வரும் நிலையில், முதல் போட்டியில் இந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியிருந்தது. இந்நிலையில், இன்று இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 389 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 104 ரன்களும், வார்னர் 83 ரன்களும் எடுத்தனர். இந்த போட்டியில் தோல்வியடைந்தால் ஒரு நாள் தொடரை இழக்கக் கூடும் என்ற நிலையில், கடின இலக்கை நோக்கி இந்திய அணி ஆடி வருகிறது. 

 

இதனிடையே, இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர் ஒருவர், தனது ஆஸ்திரேலிய காதலியை ப்ரபோஸ் செய்துள்ளார். திடீரென அந்த ரசிகர் இப்படி செய்ததைக் கண்டு ஆச்சர்யத்தில் உறைந்த பெண், அவரின் காதலையும் இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டார்.

மிகவும் பரபரப்பான போட்டிக்கு மத்தியில் நடந்த இந்த சம்பவம் அங்கிருந்த கேமராவில் பதிவாக, உடனடியாக இந்த வீடியோ வைரலாக தொடங்கியது. ரசிகர்கள் பலர், சமூக வலைத்தளங்களில் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

 

 

அது மட்டுமில்லாமல், ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி வீரர் மேக்ஸ்வெல்லும், அந்த புதிய ஜோடிக்கு கைத்தட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் ஹிட்டடித்து வருகிறது. 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Indian fan proposes australia girl during ind vs aus match | Sports News.