"ஏற்கனவே 'ரன்' வேற இஷ்டத்துக்கு போயிட்டுருக்கு..." 'போட்டி'க்கு நடுவே... கடுப்பில் 'பும்ரா' செய்த 'செயல்'... வைரலாகும் 'புகைப்படம்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில், இந்திய அணி இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது.

இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி, 370 ரன்களுக்கு மேல் குவித்திருந்த நிலையில், இந்திய அணி பந்து வீச்சாளர்கள், ஆஸ்திரேலிய மைதானங்களில் பந்து வீச சிரமப்பட்டு வருவதாக தெரிகிறது. அதிலும், குறிப்பாக இந்திய அணியின் தற்போதைய நம்பர் 1 பவுலரான பும்ரா, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக முக்கிய பங்காற்றியிருந்தார்.
ஆனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு போட்டியிலும் பும்ராவின் பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை. இரண்டு போட்டிகளில் சேர்த்து இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ள பும்ரா, முதல் போட்டியில் 73 ரன்களும், இரண்டாவது போட்டியில் 79 ரன்களும் வாரி வழங்கினார். இதனால் அதிகம் கடுப்பில் இருந்த பும்ரா, நேற்றைய போட்டியின் போது மைதானத்தில் 30 யார்டு வட்டத்தின் மார்க்கர் ஒன்றை காலால் எட்டி உதைத்துள்ளார்.
A very frustrated Jasprit Bumrah has now kicked two of the 30-yard fielding markers away with great angst. Not a good look this #ausvind @cricbuzz pic.twitter.com/ZbPSJEYJSe
— Bharat Sundaresan (@beastieboy07) November 29, 2020
இது தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாக, அது அதிகம் வைரலாகி வருகிறது. முன்னதாக, தனது கடைசி 9 ஒரு நாள் போட்டிகளில் 4 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ள பும்ரா, ஒரு விக்கெட்டுக்கும் அதிகமாக எடுத்து 10 போட்டிகளுக்கு மேலாகியுள்ளது. ஏற்கனவே, பும்ராவை இந்திய கேப்டன் கோலி சரிவர பயன்படுத்தவில்லை என்றொரு குற்றச்சாட்டை ரசிகர்கள் மற்றும் சில முன்னாள் வீரர்கள் முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
