'ப்ளேயிங் 11-லயே இப்படி சொதப்பி வச்சிருக்கீங்க'!.. 'மோசமான ஆட்டத்திற்கு காரணம்... கோலியின் ஓரவஞ்சனையா?'.. 'டோட்டல் டேமேஜ்'!.. பரபரப்பு பின்னணி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியில் இன்று ஆர்சிபி அணியின் இளம் வீரர் நவ்தீப் சைனி இறக்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான ஒருநாள் போட்டி விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. சிட்னியில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா 50 ஓவரில் 6 விக்கெட்டிற்கு 374 ரன்களை எடுத்தது.
இந்த போட்டியில் இந்திய அணியில் இன்று ஆர்சிபி அணியின் இளம் வீரர் நவ்தீப் சைனி இறக்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. இவருக்கு முதுகில் காயம் இருக்கிறது. இவர் இன்னும் முழு பிட்னசில் இல்லை. ஆனாலும் இவர் அணியில் எடுக்கப்பட்டார்.
இவர் காயமாக இருக்கிறார் என்பதால்தான் ஒருநாள் தொடரில் நடராஜனை எடுத்தனர். ஆனால் இன்று நடராஜனை களமிறக்காமல் நவ்தீப் சைனியை களமிறக்கினார்கள். ஆர்சிபி அணியில் கோலியின் கேப்டன்சிக்கு கீழ் நவ்தீப் சைனி ஆடி வருகிறார். முதல் தர போட்டியிலும் இவர் நன்றாக ஆடி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது நவ்தீப் சைனியை கோலி களமிறக்கி உள்ளார். கே. எல் ராகுல் , மயங்க் அகர்வால் போன்ற முன்னாள் பெங்களூர் வீரர்கள், சாகல் போன்ற இந்நாள் பெங்களூர் வீரர்களை கோலி ஆடும் அணியில் எடுத்துள்ளார். ஆனால் இன்று நவ்தீப் சைனி சரியாக பந்துவீசவில்லை.
10 ஓவர் போட்ட நவ்தீப் சைனி 83 ரன்களை கொடுத்தார். இவர் 1 விக்கெட் எடுத்தாலும் கூட சரியாக பந்து வீசவில்லை. முக்கியமாக இவர் சரியாக யார்க்கர், பவுண்சர் பந்துகளை வீசவில்லை. இவரின் பவுலிங் ஸ்விங்கும் ஆகவில்லை.
இதன் காரணமாக, நவ்தீப் சைனிக்கு பதிலாக நடராஜனை அணியில் எடுத்து இருக்க வேண்டும் என்று கோலிக்கு பலரும் அறிவுரை வழங்கி வருகிறார்கள். நடராஜனை இறக்கி இருந்தால் நிறைய யார்க்கர் பந்துகளை வீசி இருப்பார். அதோடு பவுன்சர் போட்டு இருப்பார்.
விக்கெட் எடுக்காமல் போனாலும் ரன் செல்வதை கட்டுப்படுத்தி இருப்பார். இந்தியாவிற்கு இவ்வளவு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்காது. ஆனால், நடராஜனை களமிறக்காமல் பிட் இல்லாத நவ்தீப் சைனியை கோலி எடுத்தது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

மற்ற செய்திகள்
