"கிட்டத்தட்ட 'நூறு' நாள் மேல ஆயிடுச்சு... என்னோட 'சொர்க்கம்'ங்க இது..." நெகிழ்ந்து போன 'வார்னர்'... வைரல் 'பதிவு'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Nov 26, 2020 05:52 PM

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டிருந்தார்.

david warner reunites with his family after 108 days

கொரோனா தொற்று காரணமாக, இந்த முறை ஐபிஎல் தொடர் முழுவதும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றிருந்தது. இதன் காரணமாக கிரிக்கெட் போட்டிகள், குவாரன்டைன் என மொத்தம் 108 நாட்களுக்கு பிறகு மீண்டும் வீடு திரும்பியுள்ளார் வார்னர்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். லாக்டவுன் சமயத்தில் வீட்டில் இருந்த வார்னர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இணைந்து பாலிவுட், டோலிவுட் பாடல்களுக்கு நடனமாடும் வீடியோக்களை வெளியிட, அவையனைத்தும் குறிப்பாக இந்திய ரசிகர்களிடம் அதிகம் வைரலாகியிருந்தது.

இந்நிலையில், கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு பிறகு மீண்டும் வீடு திரும்பியுள்ள வார்னர், எனது மகிழ்ச்சியான இடத்திற்கு வந்து விட்டதாக இன்ஸ்டாவில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது அதிக லைக்குகளை அள்ளி வருகிறது. 

 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி நாளை சிட்னி மைதானாத்தில் நடைபெறவுள்ளது. 3 ஒரு நாள் போட்டி, 3 டி 20 போட்டி மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. David warner reunites with his family after 108 days | Sports News.