ஹெல்ப் பண்றதுல கேப்டனை அடிச்சுக்க முடியாது!.. “இத செய்றதுக்கு ஒருத்தரோட உதவி வேணும்” - அனுஷ்கா ஷர்மாவின் வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 01, 2020 04:07 PM

பேறுகாலத்தில் தலைகீழாக நின்று யோகா செய்யும் நடிகை அனுஷ்கா சர்மாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Kohli helps Anushka Sharma Yogo Viral Instagram post

கோலியும் அவருடைய மனைவி அனுஷ்கா சர்மாவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாங்கள் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

அதில் தலைகீழாக நின்று யோகப் பயிற்சி செய்யும் அனுஷ்கா சர்மாவுக்கு கோலி உதவும் வண்ணம் அனுஷ்கா சர்மாவின் காலை பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பகிர்ந்த அனுஷ்கா சர்மா தனது வாழ்வில் யோகாவுக்கு முக்கிய பங்கு உண்டு என்றும் தான் கர்ப்பம் தரிப்பதற்கு முன்னர் தனது மருத்துவர் இப்படியான கடினமான யோகா பயிற்சிகளை தந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த இன்ஸ்டாகிராம் பதிவில், “இந்த பயிற்சிகளை செய்வதற்கு ஒருவருடைய உதவி தேவைப்படும். பல ஆண்டுகளாக சிரசாசனம் செய்து வரும் நான் சுவரின் உதவியோடு இந்த ஆசனத்தை செய்தேன். கூடுதல் பாதுகாப்புக்காக கணவரின் உதவியை கை கொண்டேன். யோகா பயிற்சியை பிரசவ காலத்திலும் தொடர்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆசனங்களில் கடினமான பயிற்சி சிரசாசனம்” என்று அனுஷ்கா ஷர்மா குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kohli helps Anushka Sharma Yogo Viral Instagram post | India News.