"என்ன 'தல', அடி கொஞ்சம் ஓவரோ??..." 'பிஞ்ச்'சை நக்கலாக சீண்டிய 'ராகுல்'... 'போட்டி'க்கு நடுவே நடந்த 'தமாஷ்' சம்பவம்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரையும் கைப்பற்றியது.

முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங் செய்த போது முதல் இன்னிங்ஸின் 12 ஆவது ஓவரை இந்திய வீரர் சைனி வீசினார். அந்த ஓவரில் சைனி வீசிய ஃபுல்டாஸ் பந்தை பிஞ்ச் எதிர்கொண்டார். அந்த பந்தை பிஞ்ச் தவற விட்ட நிலையில், அது அவரது வயிற்றுப் பகுதியை பதம் பார்த்தது.
இதனால், அவருக்கு ஏதோ காயம் ஏற்பட்டிருக்கலாம் என ஃபீல்டிங் நின்ற இந்திய அணி வீரர்கள் சற்று பதற்றமடைந்தனர். அப்போது, இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ராகுல், பிஞ்ச் அருகே சென்ற நிலையில், அவரின் வயிற்றுப் பகுதியில் கிண்டலாக கை வைத்தார். இதனால், உடனடியாக பிஞ்சும் சுதாரித்து கொண்டு பதிலுக்கு ராகுலை தள்ளி விட்டார்.
KL Rahul just checking on Aaron Finch after getting hit by a full toss 😅 #AUSvIND pic.twitter.com/lb9Kzthisl
— cricket.com.au (@cricketcomau) November 29, 2020
இருவரும் சிரித்துக் கொண்டே மிகவும் ஜாலியாக எடுத்துக் கொண்ட இந்த சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
