"'இந்த' ஒரு விஷயத்துக்காக... 'ரோஹித்'த இந்தியா 'டீம்' ரொம்ப 'மிஸ்' பண்ணும்... அவரு மட்டும் இருந்துருந்தா..." 'ஆகாஷ் சோப்ரா' சொல்லும் 'விஷயம்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இதுவரை நடைபெற்றுள்ள இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது.

இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்திருந்த நிலையில், இரண்டு போட்டிகளிலுமே 370 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தியிருந்தது. இலக்கை நோக்கி ஆடிய அணி, 300 ரன்களுக்கு மேல் குவித்தாலும் வெற்றி பெற முடியவில்லை.
இந்திய அணியின் தோல்வியால் விராட் கோலியின் கேப்டன்சி மற்றும் அணியின் பந்து வீச்சு லைன் அப் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. இனி வரும் போட்டிகளிலாவது தவறுகளை திருத்திக் கொண்டு இந்திய அணி சிறந்த முறையில் ஆட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அதே போல, இம்மாதிரியான இலக்கை துரத்தி பிடிக்க ரோஹித் ஷர்மா அணியில் இல்லாததும் பெரிய பின்னடைவாக கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய அணியின் தோல்வி குறித்து பேசிய முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா, இந்திய அணி ரோஹித் ஷர்மாவை அதிகம் தவற விட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 'கடினமான இலக்கை நோக்கி ஆடும் போது இந்திய பேட்டிங் வரிசை சற்று தடுமாறி வருகிறது. 350 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டுமென்றால், இந்திய அணிக்கு நிச்சயம் ரோஹித் ஷர்மா தேவை. அதுவும் குறிப்பாக இலக்கை நோக்கி ஆடும் போது ரோஹித் இல்லையென்றால் இந்திய அணிக்கு நிச்சயம் தோல்வி தான்' என கூறியுள்ளார்.
அதே போல இந்திய வீரர் ராகுல் குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, 'இந்திய அணி ராகுலை நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் களமிறக்குகிறது. அவரை ஷிகர் தவானுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும். அப்படி களமிறக்கினால் அணிக்கு சிறந்தவொரு தொடக்கத்தை ராகுல் உருவாக்கிக் கொடுப்பார்' என ஆகாஷ் சோப்ரா அறிவுறுத்தியுள்ளார்.

மற்ற செய்திகள்
