பெரிதாகும் 'ரோஹித்' - 'கோலி' விவகாரம்... போட்டிக்கு முன் நடந்த 'கான்ஃபரன்ஸ்' கால்??... "இத பத்தி தான் பேசியிருப்பாங்க போல??..." வெளியான பரபரப்பு 'தகவல்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது.

இதன் காரணமாக இனி வரும் டி 20 தொடர் மற்றும் டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய அணி அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ள நிலையில், ஒரு நாள் தொடரை இந்திய அணி இழந்துள்ளது, இந்திய கேப்டன் கோலி மீது கடும் விமர்சனத்தை உண்டு பண்ணியுள்ளது.
அது மட்டுமில்லாமல், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெறாமல் போனது தோல்விக்கு மிக முக்கிய காரணம் என பார்க்கப்படும் நிலையில், அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு கோலி தான் முழு காரணம் என ரசிகர்கள் ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, முதல் ஒரு நாள் போட்டிக்கு முந்தைய நாள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய விராட் கோலி, காயம் காரணமாக ரோஹித்திற்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்றும், ஆனால் அதன் பிறகு அவர் ஐபிஎல் போட்டிகளில் ஆடியதால் அவர் எங்களுடன் ஆஸ்திரேலியா வருவார் என நினைத்தோம் என்றும் தெரிவித்தார். ஆனால், அவர் ஆஸ்திரேலியா வரவில்லை என்றும், ரோஹித் விவகாரத்தில் வெளிப்படையான தகவல்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் கோலி தெரிவித்திருந்தார்.
ரோஹித் ஷர்மாவிடம் இருந்து எந்த தெளிவான பதிலும் இல்லை என கோலி தெரிவித்திருந்த நிலையில், நேற்றைய போட்டிக்கு முன்னர் கோலி, ரோஹித், ரவி சாஸ்த்ரி, சுனில் ஜோஷி ஆகியோரை வைத்து கான்ஃபரன்ஸ் கால் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ரோஹித் கோலி விவகாரத்தில் சமரசம் ஏற்படுத்த வேண்டி பிசிசிஐ இந்த அழைப்பை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்த அழைப்பில் ரோஹித் காயம் குறித்தும், ரோஹித் விரைவில் இந்திய அணியில் இடம்பெறுவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இன்னும் ஒரே ஒரு நாள் போட்டி மட்டும் மீதமுள்ள நிலையில், ரோஹித் டெஸ்ட் அணியில் இடம்பெறுவாரா என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
