VIDEO : "ஒன்ஸ் மோர் 'வார்னர்'..." 'ஃபீல்டிங்' சமயத்தில் வார்னர் செய்த 'செயல்'... 'கத்தி' கூப்பாடு போட்ட 'ரசிகர்'கள்... வைரல் 'வீடியோ'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Nov 27, 2020 06:43 PM

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றிருந்த நிலையில், ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

David warner dances for butta bomma song during match

முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 374 ரன்கள் எடுத்திருந்தது. பின்ச், ஸ்மித் ஆகியோர் சதமடித்து அசத்தியிருந்தார். தொடக்க ஆட்டக்காரர் வார்னரும் 69 ரன்கள் எடுத்திருந்தார். இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, ஆரம்பத்தில் சிறப்பாக ஆடினாலும், இடையே விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. பாண்டியா, தவான் ஆகியோர் மட்டுமே சிறப்பாக ஆடியிருந்த நிலையில், மிடில் வரிசை தடுமாற்றம் கண்டது.

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 308 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, ஆஸ்திரேலியா அணி ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த போது, ஆஸ்திரேலிய அணி வீரர் வார்னர் பவுண்டரி லைனுக்கு அருகே நின்றிருந்தார். அப்போது 'புட்ட பொம்மா' பாடலுக்கு வார்னர் செய்த நடன அசைவுகள் தொடர்பான வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. இடையே ரசிகர் ஒருவர் ஒன்ஸ் மோர் வார்னர் என கேட்க அவர் மீண்டும் ஆடினார். 

 

 

கொரோனா தொற்று காரணமாக, உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர். போட்டிகள் எதுவும் நடைபெறாத காரணத்தால் கிரிக்கெட் வீரர்கள் வீடுகளிலேயே பொழுதை கழித்தனர். அந்த சமயத்தில் வார்னர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து டிக் டாக் விடியோக்களை வெளியிட்டிருந்தார். இதில் புட்ட பொம்மா பாடலுக்கு அவர் ஆடியிருந்த வீடியோ அதிகம் லைக்குகளை அள்ளியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. David warner dances for butta bomma song during match | Sports News.