"திரும்பவும் அதே தப்ப தான் 'கோலி' பண்றாரு..." சொதப்பித் தள்ளிய 'இந்திய' அணி,,.. கடுப்பில் 'ரசிகர்'கள்... பரபரப்பு 'சம்பவம்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி ஆடி வரும் நிலையில், இன்று இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வியை தழுவி ஒரு நாள் தொடரை இழந்துள்ளது.

மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில், இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி 370 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தியிருந்தது. ஒரு நாள் தொடரை இந்திய அணி இழந்துள்ள நிலையில், கோலியின் கேப்டன்சி மீது மீண்டும் ரசிகர்கள் அடுக்கடுக்காக புகார்களை முன் வைத்துள்ளனர்.
முதல் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக இருந்த பவுலிங் யூனிட்டை மாற்றாமல் அதே அணியுடன் இன்றும் இந்திய அணி களமிறங்கியது. அதே போல, இந்திய அணியில் பாண்டியாவை கணக்கில் எடுக்காமல் 5 பவுலர்கள் மட்டுமே அணியில் இடம்பெற்றிருந்தது பெரிய தவறாக பார்க்கப்படுகிறது. கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளரை அணியில் இடம்பெறச் செய்திருக்கலாம்.
முதல் போட்டியில் சைனி, சாஹல் ஆகியோர் ரன்களை வாரி வழங்கினர். ஆனால், இந்த போட்டியிலும் அவர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்களுக்கு பதிலாக குல்தீப் யாதவ், நடராஜன் அல்லது தீபக் சாகர் ஆகியோரை இறக்கியிருக்கலாம்.
அதே போல, பந்து வீச்சை மாற்றிக் கொடுப்பதிலும் கோலி இன்று தவறுகள் செய்திருந்தார். ஷமிக்கு ஒரு ஓவர் மீதம் வைத்திருந்தது, ரன்களை வாரி வழங்கிய சைனிக்கு தொடர்ந்து பந்து வீச வாய்ப்பு கொடுத்தது என கோலியின் தலைமையில் சில ஓட்டைகள் இருந்தது.
ஏற்கனவே, ரோஹித் ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெறாமல் போனது பெரிய பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில், தொடர்ந்து கோலியும் தவறுகளை செய்ததன் காரணமாக, ஒரு நாள் தொடரை இந்திய அணி இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
